மாத சிவராத்திரி…! மாந்தர்கள் வணங்க வேண்டிய “சிவன்” ராத்திரி..??

Published by
kavitha

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம்”சிவன்” சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார்.

சிவசக்தியால் வந்த சிவராத்திரி…!

அதன்பால் அன்னை பார்வதி  தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அவ்வாறே நடைபெறும் என்று அருள் புரிந்தார். தேவியை போல நந்தி பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் இதனை கடைப்பிடித்து வருவர்.

சிவராத்திரி விரதத்தின் வகை

நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி.

விரதம் மேற்கொள்ளும் முறை..!

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

நான்கு கால யாமம் பூஜைகள்…!

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் வரும் அன்றைய தினம் சிவபெருமானை வணங்கினால்  கவலைகள் அனைத்தும் நீங்கும்.

முதல் யாமம்…!

வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்,அபிஷேகம் – பஞ்சகவ்யம்,                அலங்காரம் – வில்வம்,அர்ச்சனை – தாமரை, அலரி,நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைபொங்கல்,பழம் – வில்வம்,பட்டு – செம்பட்டு,தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்,மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்,புகை – சாம்பிராணி, சந்தணக்கட்டை,ஒளி– புட்பதீபம்.

இரண்டாம் யாமம்…!

வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்,  அபிஷேகம்-பஞ்சாமிர்தம்  அலங்காரம்  – குருந்தை,அர்ச்சனை – துளசி,நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல் ,பழம் – பலா,பட்டு – மஞ்சள் பட்டு,தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்,மணம் – அகில், சந்தனம்,புகை – சாம்பிராணி, குங்குமம்,ஒளி– நட்சத்திரதீபம்.

மூன்றாம் யாமம்…!

வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்,அபிஷேகம் – தேன், பாலோதகம்,  அலங்காரம்  – கிளுவை, விளா,அர்ச்சனை – மூன்று இதழ் வில்வம், சாதி மலர்,  நிவேதனம் – எள்அன்னம்,பழம் – மாதுளம்,பட்டு – வெண் பட்டு,தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி,மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்,புகை – மேகம், கருங் குங்கிலியம்,ஒளி– ஐதுமுக தீபம்.

நான்காம் யாமம்…!

வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்),அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்,அலங்காரம் – கரு நொச்சி,அர்ச்சனை – நந்தியாவட்டை,நிவேதனம் – வெண்சாதம்,பழம் – நானாவித பழங்கள்,பட்டு – நீலப் பட்டு,தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்,மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்,புகை – கர்ப்பூரம், இலவங்கம்,ஒளி– மூன்று முக தீபம்.

 சிவராத்திரியின் விரதத்தின் பலன்கள்…!

‘சிவாய நம’ என்று சிந்தையில் நினைத்திருந்தால் ‘சிரமம்’ நமக்கு ஏற்படாது,’சிறப்பு’மட்டுமே நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதம் நிறைந்த நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். அன்று ஒரு நாள் முழுவதும்,நான்கு கால ஜாம பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் திருநாமத்தை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும் அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கையில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவன் கோயிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்கின்றன புராணங்கள்.

மேலும் தகவலுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்..,

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

3 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

4 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

5 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

7 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

7 hours ago