சித்திரை திருவிழா..!! நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தொடங்கியது..!!

Default Image

சித்திரை திருவிழா நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தொடங்கியது இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 9.15 மணிக்கு திரளான பக்தர்களுக்கு மத்தியில் திருக்கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு அன்னதானம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர். இரவில் பக்தி இன்னிசையை தொடர்ந்து புஷ்பக வாகனத்தில் சாமி எழுந்தருளினார்.

திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) ஆன்மிக சொற்பொழிவு, இசை பட்டிமன்றம், சிம்ம வாகனத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடக்கின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுமன் வாகனத்தில் சாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து விழா நாட்களில் காலையில் சாமி எழுந்தருளல், பகலில் அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்