சனி பகவானுக்கு ‘சனீஸ்வரன்’ பெயர் வர யார் காரணம் தெரியுமா?
நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கடவுள் சனீஸ்வரன் தான். அவருக்கு இப்பட்டம் வருவதற்கு பின் ஒரு காரணம் உண்டு. அது யாதெனில், சனி பகவானுக்கு கொடுக்கப்பட்ட வேலையானது, மக்களுக்கு அவர்களது பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அவர்களுக்கு கஷ்டங்களையும், வரங்களையும் கொடுக்கும் வேலையாகும்.
இதனை கண்டு தேவர்கள் வசைபாடினர். இதனால் மனம் சோர்ந்துபோன சனி பகவான் ஈசனிடம் முறையிட்டார். அப்போது ஈசன், நாளை நீ தேவலோகம் வழியாக கைலாயம் வந்து எண்ணை 7 1/2 நிமிடம் பிடித்து கொள் என கூறினார்.
அதன்படி தேவலோகம் வழியாக சென்ற சனி பகவனை தேவர்களும் பின் தொடர்ந்து சனி பகவான் யாரை பிடிக்க போகிறார் என பார்க்க ஆவலாய் தொடர்ந்தனர். அப்போது நேராக கைலாயத்திற்கு சென்று சிவனை பிடிக்க முற்பட்டார், அப்போது சிவன், தன்னை சனி பகவான் பிடிக்க வருவதை கண்டு ஓடினார். இருந்தாலும் அவரை துரத்தி பிடித்து பிறகு விடுவித்தார். அதனை கண்ட தேவர்கள் அனைவருக்கும் சமமான நீதியை சனி பகவான் வழங்குவதாக அவரை பெருமிதத்துடன் பாராட்டினர். அப்போது சிவபெருமான் சனி பகவானுக்கு ‘ஈஸ்வரன்’ எனும் பட்டத்தை வழங்கினார். அன்று முதல் சனி பகவான், ‘சனீஸ்வரன்’ எனவும் அழைக்கபடுகிறார்.