சந்தோஷத்தை தரும் “விநாயகர்”சதுர்த்தி…!!அரசர் ஆக்கும் விரதம்….!அனுஷ்டிப்பது எப்படி..?

Published by
kavitha

விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

Image result for விநாயகர் வரலாறு

இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்காரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயக பெருமான் சதுர்த்தி அன்று அவதரித்தார். விநாயகர், கயமுகனுடன் போர் புரிந்தார்.

 

அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக்கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ அது கயமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனம் ஆக்கி அருள் புரிந்தார்.

எந்த மங்களகரமான நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரின் நாமமே உச்சரிக்கப்பட வேண்டும் என சிவபெருமான் கட்டளையிட்டார். விநாயகரின் முக்கியத்துவத்தை உலக மக்கள் உணரும் விதத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் அவரது சிலையை சிவபெருமானே முன்னின்று பிரதிஷ்டை செய்தார்.விநாயகர் பல திருவிளையாடல்களை செய்தார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற ரங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன், வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபம் எடுத்து அழித்தார். வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.

விரதம் அனுஷ்டிப்பது எப்படி….!!

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டை சுத்தம் செய்து கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மா இலை தோரணம் கட்ட வேண்டும் பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்குமுகமாக இருக்க வேண்டும். அந்த இலை மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார்தான் விசேஷம். விநாயகருக்கு மங்கல ஆரத்தி காட்டி, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகளை, கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதனம் செய்து கணேச அஷ்டகம் கூறி பூஜை செய்து அவரை வழிபட வேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். மறுநாள் புனர் பூஜையை கொண்டாட வேண்டும். தயிர் சாதம், நெய்வேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பிள்ளையாரை கரைத்துவிடலாம்.

பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும் எருக்கம் பூவும் விசேஷமானதாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.

இலை வழிபாடு பலன்

 

விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள், வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும். வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

Recent Posts

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

35 minutes ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

54 minutes ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

2 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

2 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

3 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

14 hours ago