கும்ப ராசி நேயர்களே !
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடையவர்களே! புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொழிலதிபர்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள்.
அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரத்தில் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள். சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2018-ம் ஆண்டு பிறப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றிபெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சிலர் வாஸ்துப்படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சிலர் வாஸ்துப்படி வீட்டை மாற்றி, விரிவுபடுத்துவீர்கள். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.