கும்பாபிசேகம் செய்யும் போது கும்பமானது கடவுளின் உடலாகவும், சுற்றப்பட்ட நூல் நாடி நரம்புகளையும், உள்ளே இருக்கும் தீர்த்தமானது, ரத்தமாகவும், அதற்குள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே இருக்கும் தேங்காய் தலைப்பகுதியாகவும், கும்பத்திற்கு கீழே பரப்பிய தானியம் ஆசனமாகவும் கருதப்படுகிறது. கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும் முறைகளை கீழே காணலாம்.
தெய்வ சக்திகளை கும்பதிர்க்குள் வரவழைக்க செய்யும் பூஜை கும்பத்தில் உள்ள நீருக்குள், தெய்வ சக்திகளை வரவழைக்கச் செய்வது ‘ஆவாகனம்’ எனப்படும். கும்பத்தை கோவிலில் உள்ள தெய்வ சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை ஆகியவற்றை கொண்டு மந்திரங்கள் கூறி, பிம்பத்தில் உள்ள தெய்வ சக்தியை கும்பத்திற்கு வர செய்வார்கள்.
ஆசாரிய வர்ணம் (தன பூஜை) : கும்பாபிஷேகத்தின் போது கிடைக்கும் பொருட்களுக்கு பூஜை செய்யப்படுவது தன பூஜை ஆகும். கும்பாபிஷேகத்தின் போது கிடைக்கும் பொருளின் ஒரு பகுதி கட்டிட வேலைக்கும், ஒரு பகுதி விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்துக்கும், மூன்றாவது பாகம் ஆபரணங்கள் வாங்கவும் செலவிடப்படும். மேற்கண்ட செல்வத்தைக் கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி தர கேட்டுக்கொள்வது ‘ஆசாரிய வர்ணம்’ ஆகும்.
அனுக்ஞை (கும்பாபிஷேகம் நடத்தும் நபரை தேர்ந்தெடுத்தல்) : கட்டிட வேலைகள் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த தகுதியான நபரை விநாயகர் முன்னிலையில் தேர்ந்தெடுப்பது அனுக்ஞை எனப்படும்.
பிரவேச பலி : கும்பாபிஷேகம் நடக்கும் இடத்தில் எட்டு திசைகளிலும் உள்ள சகல ராட்சதர்களுக்கும் தேவதைகளுக்கும் உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும்படி வழி அனுப்புவது பிரவேச பலி ஆகும். திருவிழா சமயங்களிலும் இதனை செய்ய வேண்டும்.
வாஸ்து சாந்தி : வாஸ்து பகவானால் கும்பாபிஷேக கிரியைகளுக்கு எவ்விதமான தடங்களும் நேராதவாறு, பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் செய்து சாந்தபடுத்துவது ‘வாஸ்து சாந்தி’ ஆகும்.
காப்பு கட்டுதல் : மந்திரித்த மஞ்சள் கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள்.
கட ஸ்தாபனம் (கலசம் அமைத்தல்) : தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் செய்யப்பட்ட கலசம் என்ற கும்பங்கள் பயன்படுத்தப்படும். கும்பத்தில் நூல் சுற்றி, ஆற்று நீர் நிரப்பி, மேல் பகுதியில் மாவிலை செருகி, தேங்காய் வைக்கப்படும். எந்த தெய்வத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறதோ அந்த தெய்வத்தின் உடலாக குறிப்பிட்ட கும்பம் கருதப்படும்.
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் : பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து திருவுருவங்கள் மீது, சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே ‘அஷ்ட பந்தனம்’ என பெயர்.
மிருத்சங்கிரஹணம் (நவதானியங்களை வளர்ப்பது ) : கும்பாபிஷேக விழாவிற்கு முன்னர் நவதானியங்கள் முளைவிட்டு வளர வைக்கப்படும். அதற்காக சுத்தமான மண் எடுக்கப்பட்டு முளைப்பாரியில் வைத்து, அதற்குள் நவதானியங்களை இட்டு வைப்பார்கள். இவ்வாறு தானியங்களை வளர வைப்பது ‘மிருத்சங்கிரஹணம்’ என்று பெயர்.
source : dinasuvadu.com
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…