கள்ளழகர் வைகையில் இறங்குதல்…! வைகையில் தான் முதலில் இறங்கினரா…??
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் தமிழ்நாட்டின் பெருமையும்,பழமையும் வாய்ந்த மதுரையில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இரு சமயங்களான சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரையில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண விழாவுடன் காலங்காலமாக இணைத்துக் கொண்டாடப் படுகிறது. தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை வருடப் பிறப்பாகவும் சித்திரைத் திருவிழாவாகவும்கொண்டாடுபடுகின்றது
சித்திரைத் திருவிழா மதுரையில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்திற்கு தாமதமாக வருகிறார்.
அவர் வருவதற்குள் மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கை மீனாட்சியைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே மதுரையில் திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.
இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் நெடுங்காலம் இருந்து வந்ததுள்ளது . சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையன. சைவத் திருவிழாவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், வைணவத் திருவிழாவாக அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் நடைபெறுகின்றன.
வைகையில் தான் முதலில் இறங்கினார…??
இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். முன்பு தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது.
மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தன் தங்கையின் திருக்கல்யாணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருக்கல்யாணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்தவாரே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனாலும் மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே நிதர்சனமான பழைய புராணக்கதையாகும்
108 திவ்யதேசங்களுள் ஒன்றா…??
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலமாகும் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.கள்ளழகர் கோவிலை பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் திருப்பணிகளை இக்கோயிலுக்கு செய்துள்ளனர்.
சாபம் நீக்கிய திருத்தலமா…?
சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர் இருந்த துர்வாசர் முனிவரை கவனிக்காமல் இருக்கக் அதனை கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை தவளை மாறும்படி சாபத்தார். சாபம் நீங்க வேண்டி சுதபமுனிவர் வைகை ஆற்றில் தவளை வடிவில் நீண்டகாலம் தவமிருந்து திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார்.
உற்சவர் – கள்ளழகர்,மூலவர் – அழகர் அல்லது அழகியத்தோளுடையான் தமிழில், சுந்தரபாஹூ வடமொழியில்,தாயார் – சுந்தரவல்லி தனிக்கோயில் நாச்சியார்,காட்சி-சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்,திசை – கிழக்கே திருமுக மண்டலம்,தீர்த்தம் – நூபுர கங்கை எனும் சிலம்பாறு,விமானம்- சோமசுந்தர விமானம்
அழகரின் நைவேத்தியம் என்ன…?
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.
மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,