கர்ப்பை காக்கும் கர்ப்பகரட்சம்பிகை..!!இக்கோவிலுக்கு ஒரு முறை தனியாக செல்லும்.!! நீங்கள் மறுமுறை தாயாக தான் செல்வீர்கள்..!!இப்பூவுலகளில் இப்படி ஒரு வரக்கோவில்..!!
முன் காலத்தில் முல்லை வனம் என்று இத்தலம் போற்றப்பட்டது.மகரிஷிகள் சிலர் தவம் செய்து வந்தனர்.அதில் ஒரு மகரிஷி நித்துருவர் அவரின் மனைவி வேதிகை தன் கணவர்க்கும் மற்ற மகரிஷிகளுக்கும் பணிவிடைகள் செய்து வந்தாள் வேதிகை.
நெடுநாள்காக இந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை முல்லை வன நாதரை எண்ணி வழிபட்டனர் அவர்களின் பக்திக்கு இறங்கிய இறைவன் அருளால் வேதிகை தாயார் கருவுற்றார்.
கருவுற்ற வேதிகை தனித்திருந்த சமயத்தில் கர்ப்ப வழியால் மயக்கமுற்று சுயநினைவின்றி கிடந்தார்.அங்கு வந்த ஊர்த்துவ முனிவர் யாசகம் கேட்டு வாயில் நிற்க மயக்கமுற்ற வேதிகையால் பிச்சையிட முடியவில்லை இதை அறியாமல் முனிவர் வேதிகைக்கு சாபமிட சாபத்தின் பயனால் வேதிகையின் கரு அந்த சனமே கலைந்தது மயக்கத்திலிருந்து மீண்டு இதை அறிந்த வேதிகை மனமுடைந்து அம்பிகை முன்னால் கதறி அழுதார்.
தன் பிள்ளையின் அழு குரலை எந்த தாயின் தான் கேட்காமல் இருப்பாள் உடனே வேதிகை முன் தோன்றிய அம்பாள் அழதே மகளே உன் கரு கலைந்தது உன்மை தான் ஆனால் அது கலையவில்லை பாதுகாப்பாக தான் இருக்கிறது என்றாள் அம்பாள் வேதிகைக்கு ஒன்றும் புரியவில்லை.
வேதிகையின் குறிப்பை அறிந்த அம்பாள் உன் கரு கலையவில்லை மகளே இந்த குடத்தினில் உன் கருவை பத்திர படுத்தி வைத்திருக்கிறேன் என் குழந்தையின் குழந்தையை காப்பது என் கடமை அல்லவா..!!உரிய காலத்தில் கருவானது குழந்தையாக பிறந்தது அந்த குழந்தையை வேதிகையிடம் ஒப்படைத்தாள் அம்பாள் வேதிகையின் மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
முல்லை வன நாதரும்-அம்பாளும் எழுந்தருளி காட்சியளித்தனர் அம்பாளிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்த வேதிகை என் கருவை காத்து ரட்ஷித்தது போலவே எல்லா பெண்களின் கார்ப்பகாலத்திலும், அவர்களின் கருவில் வளரும் குழந்தையையும் நீ தான் தாயே காத்து ரட்ஷிக்க வேண்டும் என்றாள் அவ்வாறே நடக்கும் என்னை நினைத்து வணங்கும் பெண்களின் கருவை காத்தருள்வேன் என்று வரமாளித்தாள் அம்பாள்.இன்றும் இந்த கோவிலில் வந்து வணங்கும் தம்பதிகளுக்கு அருள் புரிவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு குழந்தை வரத்தையும் அளித்து கரு சிதைவதை தடுத்து காத்துவருகிறாள் கருகாவூர் தாயார்.
அப்படி இங்கு வந்து வணங்கி பிறந்த குழந்தைகளை தாயின் அருகில் இருக்கும் தோட்டியில் போட்டு தாயின் ஆசியை பெற்று செல்கின்றனர் இதனால் தான் இவ்வூருக்கு கருகாவூர் என்றும் கர்ப்பகரட்சம்பிகை என்று தாயார் அழைக்கபடுகிறார்.
இங்கு சென்று குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் அதிகம்.
மேலும் இங்கு தாயார் பாதத்தில் வைத்து பிரசதமாக தரப்படும் நெய்யானது குழந்தை வரம் வேண்டுவோர்க்கு வழங்கப்படுகிறது இதை அம்பாளை நினைத்து கொண்டு 48 நாட்கள் சாப்பிடும் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கிறது பெண்மை பிரச்சணை உள்ள 5 நாள்களை மட்டும் தவிர்த்து மற்ற நாள்களில் பெண்கள் உண்ணலாம் மற்றும் பிரசவ காலத்தில் பெண்களுக்கு சுக பிரசாவம் ஆக வேண்டும் என இங்கு வந்து வேண்டிணால் கண்டிப்பாக அவர்களுக்கு சுகப்பிரசவம் தான் நடக்கும் என்பது அசைக்க முடியாத ஆச்சர்யம்.
இத்தகைய அற்புதமான தாயரை வணங்கினால் போதும் பிள்ளைகளின் குறைகளை கணப்பொழுதில் தீர்த்து வைப்பவள் அன்னை கர்ப்பகரட்சம்பிகை இவ்வரக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பாபநாசத்திற்கு தெற்கே ஆறு கிலோமிட்டர் தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நீங்களும் தாயர் கோவிலுக்கு சென்று நல்ல செய்தியுடன் வாருங்கள்…
ஆன்மீக தகலுடன் மீண்டும் சந்திப்போம்….