வருகிறது கிருஷ்ண ஜெயந்தி..!!கிருஷ்ணரை வரவேற்பது எப்படி..!!

Default Image
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ண பற்றி கேட்பதும்,காண்பதும் புண்ணியம் தானே..!
இனி “கிருஷ்ணர்”  பிறந்த கதையை பார்போம்….!
Related image
வடஇந்தியாவில் மதுரா நகரம் ஒன்று உள்ளது அந்நகரத்தின் அரசனான கம்சன் தன் மீது அளவில்லா பாசமும் வைத்திருந்தான். தங்கையான தேவகிக்கு திருமணவயது வந்தவுடன் யதுகுலத்தவரான வசுதேவருக்கு அவளை மணமுடித்தான். திருமணம் முடிந்து தானே மணமக்கள் இருவரையும் தேரில் வைத்து மதுரா நகரின் சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான்.
Image result for kamsa-devaki
அப்போது திடீரென கம்சனின் செவிகளில், எந்தத் தங்கையை அரசன் ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றானோ, அதே தங்கையின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது எனும் வார்த்தைகள் ஒலித்தன. அதைக் கேட்ட அரசன், தங்கை என்றும் பாராமல் உடனே தேவகியைக் கொல்ல முற்பட்டான்.
Related image
உடனே வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை உனக்கே தந்துவிடுகிறேன் ஆனால் என் மனைவியை ஒன்றும் செய்துவிடாதே, எனக் கம்சனிடம், கெஞ்சினார். அதற்கு மனம் இளகிய கம்சன், அவர்கள் இருவரையும் கொல்லவில்லை ஆனால் அதற்கு பதிலாக அவர்களைச் சிறையில் அடைத்து வைத்தான். குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். எட்டாவதாக கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று அவதரித்தார் அவர் அவதரித்த இந்நாளையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடிகிறோம்.தேவகிக்கு மகனாக பிறந்து யசோதையின் மகனாக வளர்ந்தார் கிருஷ்ணர்.கம்சனை அளிப்பதற்காக அவரித்த அவதாரமே கிருஷ்ண அவதாரம்.
Image result for kamsa-devaki
கிருஷ்ணாரை எப்படி அன்று மகிழ்விப்பது…!!
கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று  கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கத்து அவரை வணங்க வேண்டும்.அவருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணெய் இடம் பெற்றிருக்க வேண்டும்.அதனுடன் தயிர் வைத்தும் நாம் அந்த கருநீல வண்ணனை வணங்க வேண்டும்.
Related image
கிருஷ்ணர் சேட்டை செய்வதில் வல்லவர் வெண்ணெய்க்காகவே சேட்டை செய்வது போன்ற திருவிளையாடல்களை நிகழ்த்தியவர்.அவர் பசுக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.யசோதையின் பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ண லீலைகளை சொல்ல நேரம் தான் போதுமா..காலம் தான் கானுமா..!!
Related image
முக்கியமாக கிருஷ்ண ஜெயந்தி அன்று சாப்பிடாமல் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய்,  பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.இவ்வாறு விரதம் இருந்து வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்கு கண்டிப்பாக குட்டி கிருஷ்ணன் வீட்டில் தவழ்ந்து விளையாடுவார் என்பது இன்றாளவும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.நாமும் அந்த கருநீல வண்ணணை  கார்மேக கிருஷ்ணனை வணங்கி அவன் அருள் பெறுவோமாக..!நலம்…
 
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்