என்றும் பதினாறு யாருக்கு ..?? அறிந்து கொள்ள வேண்டுமா ..???
அறுவது வயது வந்த தம்பதியர்கள் மனிவிழா செய்வது வழக்கம்.அவரவர் ராசிகளுக்கு ஏற்ப சிலர் வீடுகளில் செய்து கொள்வர்.சிலர் கோவிலில் செய்து கொள்வார்கள்
சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடவூரில் செய்து கொண்டால் ஆயுள் நீடிப்பு உண்டு.கடம் என்றால் குடம் என்று பொருள்.அத்தைய அமிர்த குடத்தை அருளிய அமிர்தகடேஸ்வரர். அம்பாள் அபிராமியாக இங்கு காட்சி தருகிறாள்.
மேலும் என்றும் நீ பதினாறு என்று சிவபெருமானிடம் உயிர் வரம் பெற்றதோடு என்றும் பதினாறு என்ற வரத்தை மார்க்கண்டையேயர் பெற்ற சிறப்பு தலமாகும்.
மேலும் மார்க்கண்டேயனை காக்க ஈசன் திருவிளையாடல் புரிந்து எமனை காலால் எட்டி உதைத்த திருத்தலமாகும்.இதனால் இங்கு வருபவர்களுக்கு எம பயம் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த திருத்தலத்தில் தான் அபிராமி அந்தாதி என்ற சிறப்பு பெற்ற பாடலை பட்டர் அம்பாள் மீது பாடி அமாவாசையை முழு நிலவாக மாற்றிய பெருமை கொண்ட திருத்தலமாகும்.
இத்தைய இறைவனின் பேரருள் பெற்ற இத்திருத்தலத்தில் மணிவிழா செய்து கொண்டால் அல்லது செய்து கொள்ளும் வாய்ப்பை பெறுகிறவர்கள் வாழ்வில் தொடர்ந்து என்றும் பதினாரை போல அன்பும், பாசமும் நல்ல நிகழ்வுகளும் தொடரும் மற்றும் தொடர்ந்து நல்ல மங்கல விழாக்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடைபெறும் என்பது நம்பிக்கை.
எனவே இத்திருத்தலத்தை தரிசிப்பது பாக்கியம் என்றால் அதில் மணிவிழா காண்பது அதை விட பெரும் பாக்கியமாகும்.