இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது…!!

Default Image

இன்று தை பூச நாளன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அவைகள் எதுவும் உண்மையில்லை என்று வள்ளலார் வலியுறுத்தினார். இந்து சமயத்தில் பல மூட நம்பிக்கைகளுக்குக் காரணமாக உள்ள எண்ணற்ற சிறு தெய்வங்களின் வழிபாட்டை மக்கள் கைவிடவேண்டுமென்று வலியுறுத்தினார். இறைவன் ஒன்றே. அவன் ஜோதிவடிவ்த்தில் இருக்கிறான். என்று நம்பினார். அதனையே அனைவருக்கும் போதித்தார். அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், அவரை அன்றைய சைவவாதிகள் ஏற்கவில்லை. வள்ளலாரின் கருத்துக்களுக்கு கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர்.
வள்ளலார் வடலூரில் தான் நிறுவிய சத்திய ஞானசபையின் சித்தி வளாகத்தில்,. 1874ல் தை பூச நாளன்று ஜோதியில் கலந்து விட்டதாக அவரது அடியார்கள் நம்புகின்றனர். இராமலிங்க அடிகளார் வள்ளலார் வகுத்த வாழ்க்கை நெறிகள் அடங்கிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் – திருவருட்பா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்