ஆரணியில் உள்ள ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத கயிலாசநாதர் கோவிலில் பிரதோச விழா….!!

Default Image

ஆரணியில் உள்ள ஸ்ரீஅறம் வளர்நாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத கயிலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அடுத்தபடியாக பெரிய கோவிலாக விளங்கி வருகிறது.
ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத கயிலாசநாதர் கோவிலில் மார்கழி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் பார்வதி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் பக்திபரவசத்துடன் கோவிலின் உள்பிரகாரத்தை வலம் வந்து வணங்கினர்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்