சூரரை போற்று படத்தின் ‘வெய்யோன் சில்லி’ பாடல் செய்த சாதனை.!

சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.  ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத் தக்கது. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக மாறியுள்ளது இந்த நிலையில் தற்போது சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடலின் லிறிக்கல் வீடியோ யூடுபில் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.