#DelhiElectionResults: 62 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிப்பு.! பெருமான்மையை நிரூபித்த கெஜ்ரிவால்.!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 55 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலின் முடிவுகளில் பெருமான்மையை நிரூபித்து ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியமைக்கிறது. மேலும் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்