அருண் ஜெட்லி  மரணம் !தமிழக தலைவர்கள் இரங்கல்

உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த முன்னாள் மத்திய அருண் ஜெட்லி  உயிரிழந்துள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அருண் ஜெட்லியின் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்: 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்களில்,  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர். கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் கூடிய பண்பாளர் என்று தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு  இரங்கல்:

டி.ஆர்.பாலு இரங்களில்,அனைவரிடம் எளிதாக பழக கூடியவர் அருண் ஜெட்லி, அவரின் மறைவு செய்து மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இரங்கல் :

தமிழிசையின் இரங்கல் செய்தியில், அருண் ஜெட்லி மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்:

அமைச்சர் ஜெயக்குமார் இரங்களில், அனைவரிடமும் எளிதாக பழக கூடியவர் அருண்ஜெட்லி, நல்ல மனிதரை நாடு இழந்துவிட்டது.அருண்ஜெட்லியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்துள்ளார்.