மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு : அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் துணி!

மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு : அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் துணி!

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றிற்குள் மருத்துவர்களின் கவனக்குறைவால் துணி இருந்ததால் பெண் உயிரிழப்பு.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது கணவர் அழைத்துச் சென்று வயிற்றுவலி குறித்து கூறிய போது பெண்ணின் வயிற்றுக்குள் ஒரு துணி இருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தை பெற்ற பொழுது நடைபெற்ற அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கவனக்குறைவாக துணியை வயிற்றுக்குள்ளேயே விட்டுள்ளனர். இதனால் தான் அந்த பெண்ணுக்கு தொடர் வயிறு வலி இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து இந்தத் துணி மீண்டும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்ட நிலையில், இந்த பெண் மிகுந்த உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் தில்ஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube