வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் வாஷிங்டன் DC….!

வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் வாஷிங்டன் DC….!

Default Image

ஆக.8 வட கொரியா மீது கடுமை யான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா தாக்கல் செய்தது.அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்புக் குழு ஏற்கெனவே விதித்திருந்த தடைகளை மீறி அணு குண்டு சோதனை, ஏவுகணைகள் சோதனை ஆகியவற்றில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்ததாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இரும்பு, நிலக்கரி, உணவு, மீன் வகைகள் உள்ளிட்ட பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை வட கொரியா ஈட்டி வருகிறது. அந்த வருவாய் கிடைக்காமல் இருக்கச் செய்யும் விதமாகப் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இதனால் 100 கோடி டாலர் (சுமார் ரூ.6500 கோடி) வருவாயை வட கொரியா இழக்கும்.சீனா, ரஷ்யா போன்ற ஓரிரண்டு நட்பு நாடுகளைத் தவிர, உலக நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டிருக்கும் வட கொரியாவில் அப்பாவிப் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சில வகை பொருளாதாரத் தடைகளை விதிப்பதை அமெரிக்கா தள்ளிப்போட்டு வந்தது.இந்த நிலையில், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சென்ற ஜூலை மாதம் 4-ஆம் தேதி வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது. அது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத் தைத் தாக்கும் வல்லமை உள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, மீண்டும் ஜூலை 28-ஆம் தேதி மேலும் சக்தி வாய்ந்த ஏவுகணை பரிசோதனையை வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டது.

இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் இலக்கு வைத்து தாக்கும் வல்லமை கொண் டது என்பதை மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், வட கொரியாவின் அந்நியச் செலாவணி வருவாயை பாதிக்கும் வகையில் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை ai.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. 

Join our channel google news Youtube