சிலிண்டர் வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!

சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், இடிபாடுகளில் தீயணைப்பு வீரர் பத்மநாதன், அவரது மனைவி தேவி கார்த்திக்ராம், மற்றொருவர் சடலம் மீட்கப்பட்டது. ஏற்கனவே 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan