சிலிண்டர் வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

சிலிண்டர் வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

சேலத்தில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்வு.

சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube