சிலிண்டர் வெடிப்பு : அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய குடும்பம்

சிலிண்டர் வெடிப்பு : அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய குடும்பம்

Default Image

கொடைக்கானல் வெள்ளப்பாறை அருகில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு முற்றிலும் சேதமடைந்தது.

கொடைக்கானல், பழனி செல்லும் சாலையில் உள்ள மேல் வெள்ளப்பாறை என்னும் இடத்தில் 20 வருடமாக வசித்து வருபவர் சுரேஷ். நேற்று இரவு வீட்டில் புதியதாக வாங்கி வைத்திருந்த சிலிண்டரில் சமையல் செய்யும் போது இருந்து லேசான கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து,லேசான தீப்பொறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த சுரேஷ், அவரது மனைவி பாரதியையும், தாயாரையும் அழைத்து கொண்டு வெளியில் வந்ததுள்ளார். அவர் வெளியில் வந்த சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் தகரம் 50 அடி உயரத்தில் தூக்கி எறியப்பட்டதாக தெரிகிறது. வீட்டில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. முன்னெச்சரிக்கையாக மூவரும் வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Join our channel google news Youtube