மாயமான மலாவி நாட்டு விமான விபத்து: துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் உயிரிழப்பு.!

Malawi vice president - plane crash

தென்னாப்பிரிக்கா: மாலவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதை தொடர்ந்து, துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா உட்பட அவருடன் பயணித்த 9பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் தலைநகரான லிலாங்வேயில் இருந்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9.17 மணிக்கு (07.17GMT) Mzuzu-க்கு செல்லும் வழியில் காணாமல் போனதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. 51 வயதாகும் துணை அதிபர் சிலிமா உள்ளிட்ட 10 பேருடன் அந்த விமானம் சென்றது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்ததால், திரும்பிச் செல்ல கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், கட்டுப்பாட்டாளர்கள் விமானத்துடனான தொடர்பை இழந்தனர், அதன்பின், விமானம் மாயமாகியுள்ளது. இதனையடுத்து, Mzuzu அருகே Viphya மலைகளில் உள்ள ஒரு பரந்த காட்டு பகுதியில் சுமார் 600 பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 10) காணாமல் போன மலாவி தற்காப்புப் படையின் விமானத்தைத் தேடும் பணி இறுதியில் வருந்தத்தக்க வகையில், இன்று சோகத்தில் முடிந்துள்ளது என்பதை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒரு நாளுக்கும் மேலாக நீடித்த தேடுதலுக்கு பிறகு, விமானத்தில் இருந்த 6 பயணிகள் மற்றும் 3 இராணுவ வீரர்கள் உட்பட இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. 

தற்பொழுது, காணாமல் போன இந்த விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது எனவும், என்ன காரணத்தினால் விமானம் காணாமல் போனது என்பது குறித்தும், இது ஏதுனும் சதியா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்