நெல்லை: மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. 2012இல் கொலை செய்யப்பட்ட தேவேந்திரகுள வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தீபக் ராஜா கடந்த 20ஆம் தேதி நெல்லை கே.டி.சி நகர் பகுதியில் நெல்லை – திருச்செந்தூர் சாலையில் உள்ள உணவகத்தில் தனது காதலியுடன் உணவு அருந்திவிட்டு வெளியே வந்த போது பட்டப்பகலில் ஓர் மர்ம கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்தியிலேயே தீபக் ராஜா உயிரிழந்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். லெப்ட் முருகன், நவீன் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் வரையில் தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரின் உறவினர்கள் கூறிவந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு , காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து இன்று தீபக் ராஜா உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரித்துள்ளனர்.
இதனை அடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டுள்ள தீபக் ராஜா உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால், நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மூன்றைப்பு பகுதி வரையில் நெல்லை மாநகர் முழுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…