அமெரிக்க ஐடி நிறுவனத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்ததையடுத்து,ஸ்வீடன் 800 கடைகளை திறக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஐடி நிறுவனத்தின் மென்பொருள் சப்ளையரான கசேயா மீதான ரன்சொம்வேர் (ransomware) சைபர் தாக்குதலுக்குப் பின்னர் ஸ்வீடனில் உள்ள கூப்பின் நிறுவனம் தனது 800 மளிகை கடைகளை திறக்க முடியாமல் தவித்தது.காரணம், அவற்றின் பணப் பதிவேடுகள் செயல்படவில்லை என்று நாட்டின் பொது ஒளிபரப்பாளர் தெரிவித்தார். மேலும்,இந்த சைபர் தாக்குதலால் கிட்டத்தட்ட 200 அமெரிக்க வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது […]
சாகர் ராணா கொலை வழக்கில் கைதான,மல்யுத்த வீரர் சுஷில் குமார்,சிறையில் தனக்கு டிவி வேண்டும் என்று கோரி திகார் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் சாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை மே 23 […]
மதுரையில் இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய சிவக்குமார் மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் மூலம் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த காப்பக ஊழியர்கள், குழந்தையை வாங்கிய தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்,குழந்தைகள் விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், மாதார்ஷா, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 […]
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில்,கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி,அவரை புழல் சிறைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்தனர். இதனையடுத்து,மணிகண்டனை 5 நாள் […]
நடிகைக்கு அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ்களை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனுக்குடன் அழித்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் […]
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால், 2 நாட்கள் மேற்கொண்ட விசாரணையிலேயே போதுமான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் அவருடைய பள்ளிக்கு அழைத்து […]
தமிழகத்தை சேர்ந்த 50 லட்சம் ரேசன் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் ஆன்லைனில் லீக்கானதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெக்னிசாங்க்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பு (பி.டி.எஸ்) ஹேக் செய்யப்பட்டதாகவும்,அதன்மூலம் 50 லட்சம் ரேசன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய தரவு, ஹேக்கர்களுக்கான இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெக்னிசாங்க்ட் தெரிவித்துள்ளது. அவ்வாறு,இணையத்தில் லீக் ஆன தரவுகளில் தமிழகத்தில் மொத்தம் 49,19,668 ரேசன் பயனாளர்களின் ஆதார் தகவல்கள் அடங்கியுள்ளதாக சைபர் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்கள் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக மருத்துவர் அடையாறு மகளிர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி,அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் மணிகண்டன் […]
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அம்மனுவில்,”தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தாலுகாவில் உப்பாற்று ஓடை உள்ளது.இந்த ஓடைக்கு அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2016 அக்டோபர் மற்றும் 2015 நவம்பர் மாதங்களில் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு […]
ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.40 மணியளவில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பகுதியில் நள்ளிரவு 1.40 மணியளவில் 5 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. முதல் குண்டுவெடிப்பு விமான நிலைய தொழில்நுட்ப பகுதியின் மேற்கூரையை கிழித்தெறிந்தது.இரண்டாவது குண்டு கீழே தரையில் வெடித்து.இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பெரும் சத்தம் எழுப்பும் அளவிற்கு,இந்த குண்டுவெடிப்பின் தாக்கம் இருந்ததாகவும், எனினும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை […]
மும்பையில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கு பதிலாக உப்புத் தண்ணீர் செலுத்திய மோசடி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் சில பகுதிகளில் மே 25 முதல் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில்,போலியான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.மேலும்,மருந்துக் குப்பிகளின் மூடிகள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்ததைக் கண்ட மக்கள்,அதுகுறித்து சந்தேகம் அடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து,மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளதால்,அதைப் […]
சிவசங்கர் பாபாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து,சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையில்,உடல்நிலை […]
ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 48) என்ற கறுப்பினத்தவர், கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி அவரது கழுத்தில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் முழங்காலை வைத்து அழுத்தினார்.இதனால் மூச்சுவிட முடியவில்லை என்று பிளாய்ட் கெஞ்சியும் அதிகாரி தனது காலை எடுக்கவில்லை.இதன்காரணமாக,மூச்சுத்திணறி […]
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அமீர் என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில்,அவரது நண்பர் வீரேந்தரை போலீசார் டெல்லியில் இன்று கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஏடிஎம்களில் டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் நூதன முறையில் பணம் திருடி உள்ள சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியுள்ளது.சென்னையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்னையில் உள்ள தரமணி, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்களில் சென்சாரை மறைத்து இந்த இளைஞர்கள் பணம் திருடி உள்ளனர். கடந்த […]
மல்யுத்த வீரர் சுஷில் குமார் மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்காருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், சாகர் தங்கார் பலத்த காயமடைந்தார். பின்னர், சாகர் தங்காரை அவரது நண்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால், […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி நாளை ஒத்தி வைத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எதிராக […]
பீகாரில் வசிக்கும் பெண் ஒருவர்,பிரசாந்த் சதுர்வேதி என்ற பூசாரி தனது கனவில் வந்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீசாரிடம் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண்,தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்,கடந்த ஜனவரியில் பூசாரி பிரசாந்த் சதுர்வேதியை அணுகியிருந்தார். அப்போது,அந்த சதுர்வேதி அந்த பெண்ணின் மகனுடைய உடல்நிலையை சரிசெய்வதற்காக ஒரு மந்திரத்தை கொடுத்து,சில சடங்கு முறையையும் செய்ய சொன்னார்.ஆனால்,அந்த பெண்ணின் மகன் 15 நாட்களுக்குப் பிறகு இறந்தார். […]
ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியாக இருந்த ஜான் மெக்காஃபே நேற்று சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியாக இருந்த 75 வயதான ஜான் மெக்காஃபே,தனது பெயரிலான மெக்காஃபே நிறுவனம் என்ற திட்டத்தை 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து,கடந்த 2014- 18 ஆம் ஆண்டுகளின்போது மெக்காஃபே 12 மில்லியன் டாலர்களை வருமானம் ஈட்டியதாகவும், ஆனால், வரியை முறையாக செலுத்தவில்லை என்றும் அமெரிக்கா […]
சேலம் வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான எஸ்.ஐ.பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி,மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். […]
ஆன்லைனில் ஆஃபர் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடும் செயல்களை தடுக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் மோசடி விற்பனைகளை தடுப்பதற்காக,மத்திய நுகர்வோர் விவகாரங்கள்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது,2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளில் பெரும் மாற்றங்களை செய்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.அதன்படி, இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும்,கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான ஊக்குவிப்புத் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்ய வேண்டும். விசாரணை அல்லது பாதுகாப்பு […]