புனே போர்ஷே கார் விபத்த்தில் சிறுவனின் தாத்தா கைது.!
புனே கார் விபத்து : புனே போர்ஷே கார் விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டார்.
புனேவில் அமைந்துள்ள கல்யாணிநகர் அருகே கடந்த 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பிரபல கட்டிடத் தொழிலாளியின் மகனான 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற போர்ஷே கார், எதிரே வந்த சிறு வாகனம் மீது மோதியதில் இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் மது அருந்தி கார் ஓட்டியதில் தான் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க, அவரது தாத்தா பின்னால் இருந்து வேலை செய்தாக குற்றசாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார். கார் ஓட்டுநர் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிறுவனின் தந்தை விஷால், ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறை தரப்பில் விசாரித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் உறுதியளித்துள்ளார்.