பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது

பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிதி உதவியையும் அறிவித்திருந்தார்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு ஆலையின் உரிமையாளர் அனுசுயா தேவியை, சிந்துபட்டி போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *