கொரோனாவால் மீண்டும் சினிமாயுலகில் ஒருவர் பலி.! சோகத்தில் ரசிகர்கள்.!

கொரோனாவால் மீண்டும் சினிமாயுலகில் ஒருவர் பலி.! சோகத்தில் ரசிகர்கள்.!

Default Image

ஹலோ துபாய்க்காரன் என்ற படத்தினை தயாரித்து நடித்த ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. அதில் சினிமா பிரபலங்களும் அடங்கும்.அண்மையில் ஹாலிவுட்டில் பலர் உயிரினை கொரோனா பறித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான எஸ். ஏ. ஹாசன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் அலுவாலியா பகுதியை சேர்ந்த இவர் ‘ஹலோ துபாய்க்காரன்’ என்ற படத்தினை தயாரித்து நடித்திருந்தார். தொழிலதிபரான இவர் துபாயில் டெக்ஸ்டைல் கடை வைத்து நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மனைவி மற்றும் 3 குழந்தைகளும், ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Join our channel google news Youtube