இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 25 ஆம் தேதி காலை 9.30 மணி நிலவரப்படி இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,105 ஆக உள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,922  பேரை இந்த வைரஸ் புதிதாக பாதித்துள்ளது. இவர்களில், 1,86,514 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிலாந்தாவர்களின் எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது.