ரத்து செய்யப்பட்டது விசா..கருப்பு பட்டியலில் சேர்ப்பு..உள்துறை அதிரடி

தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் இந்தியாவில்  கொரோனா பாதிப்பு  மிக அதிக அளவு  உயர்ந்து வரும் நிலையில் 1300 வெளிநாட்டவர்கள் உட்பட 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நிஜாமூதினில் நடைபெற்ற  மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 ஆயிரம் பேர் காவல்துறையினரால் அடையாளம்  கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதில் 1300 பேர் வெளிநாட்டினர் என்றும்,இதில் கலந்து கொண்டவர்கள் மூலமாக 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மூலமாக கொரோனா வெகுவாக அதிகரித்து உள்ளதாகவும்;இதில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசா பெற்று மதரீதியான மாநாட்டில் பங்கேற்றதற்காக அவர்களை கருப்பு பட்டியலில் வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,மேலும் 906 பேரின் விசா ரத்து செய்ய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள உள்துறை காசியாபாத்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தப்ளித் ஜமாத் உறுப்பினர்கள் சிலர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து பிரச்சனையில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

author avatar
kavitha