கொரோனா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க மனு கொடுத்த நபருக்கு ரூ.25,000 அபராதம் !

கொரோனா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3லட்சம் வழங்க மனு கொடுத்த நபருக்கு 25,000 ருபாய் அபராதம் !

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1240 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட கோரி ராஜேந்திரன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரரான ராஜேந்திரனுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Vidhusan