ராணுவ வீரர்களை துரத்தும் கொரோனா.! இதுவரை 359 பேருக்கு வைரஸ் பாதிப்பு.!

இன்று மட்டுமே 9 சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 1.31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,867 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

இதில், நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் பிரிவில் முக்கிய பிரிவாக பணியாற்றும் சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களை கொரோனா பாதிப்பு தொடர்ந்து துரத்திக்கொண்டிருக்கிறது. இன்று மட்டுமே 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 359 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரையில் 137 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.