தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து,  இன்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.