தமிழ்நாட்டில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதி.. 11 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் 811 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,23,181 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 12,188 பேர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 943 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8,03,328 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 63,582 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,45,66,511 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்