கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த போலீசார் ! வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் தகவல்

கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த போலீசார் ! வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் தகவல்

  • டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. 
  • கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த டெல்லி  போலீசுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றது.இதன்விளைவாக டெல்லியில் உள்ள   ஜாமியா பல்கலைகழகத்தில் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.அப்பொழுது அவர்கள் மீது போலீசார்  தடியடி நடத்தினார்கள்.இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மாணவர்கள் போராட்டத்தின் போது கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த டெல்லி போலீசுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவுள்ளோம்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube