தொடர் போராட்டம்!! ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் தொடங்கியது!!

தொடர் போராட்டம்!! ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் தொடங்கியது!!

Default Image

சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் தொடங்கியது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று போராட்டம் குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், போராட்டம் தொடரும்.பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? .போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.பேச்சுவார்த்தை நடத்தினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் . இன்று மாலை  கூடவுள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் தொடங்கியது

Join our channel google news Youtube