இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

பின்னர் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் பாஜக கூட்டணி மூலம் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

இன்று விசிக, கொ.ம.தே.க உடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!

இந்நிலையில்,  நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும். தற்போதைய பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

அதில் பாஜகவிற்கு 78 எம்.எல்.ஏக்களும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 எம்.எல்.ஏக்களும், ஹெச்.ஏ.எம்.எஸ்-க்கு 4 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகளான 114 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் 79 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸில் 19 எம்.எல்.ஏக்களும், இடதுசாரிகளில் 16 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

author avatar
murugan

Leave a Comment