வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது – அமைச்சர் கே.என்.நேரு

வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது – அமைச்சர் கே.என்.நேரு

வீடுகளில் தின்பண்டங்கள் செய்பவர்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இது தான் காரணம்.

சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், வீடுகளில் தின்பண்டங்கள் செய்பவர்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இது தான் காரணம். பாதுகாப்பின்றி வீடுகளில் வணிக சிலிண்டர்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பாக ஆய்வு செய்து, முறையான பாதுகாப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கதக்கதாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube