அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது! கேப்டன் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா!

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடைய உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்

விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவக்குமார், கார்த்தி இருவரும் நேற்று தனது அஞ்சலியை செலுத்தினார்கள்.  ஏற்கனவே, தான் வெளிநாட்டில் இருப்பதால் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என வீடியோ வெளியீட்டு சூர்யா அஞ்சலி செலுத்தி இருந்தார்.

விஜயகாந்த் வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர்! சிவக்குமார் எமோஷனல்!

அதனை தொடர்ந்து, கங்குவா படப்பிடிப்பில் காயம் அடைந்தபின் வெளி நாடு சென்ற நடிகர் சூர்யா இந்தியா வந்ததும் இன்று காலை 10.30 மணியளவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி  செலுத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்த சூர்யா கண்ணீர் விட்டு தம்பி தேம்பி அழுது தனது அஞ்சலியை செலுத்தினார்.

மரியாதையை செலுத்திய பிறகு பேசிய நடிகர் சூர்யா ” அண்ணன் விஜய்காந்த்  பிரிவு ரொம்ப ரொம்ப துயரமானது. எனக்கு பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முதல்நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்தார் அவரின் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார். நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் விஜயகாந்திற்கு அதிக பங்கு உண்டு, அதற்கான மரியாதையை செய்ய வேண்டும்” எனவும் சூர்யா கூறினார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.