ஸ்ரீ வெங்டேஸ்வரா ஸ்வாமி கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆந்திராவில் புதிதாக அமையவுள்ள வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலைப் போன்று ஆந்திரா மாநில தலைநகர் அமராவதியில் புதிதாக அமைய இருக்கும் திருக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆந்திரா தலைநகர் அமராவதியின் உள்ள வெங்கடபாலம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அமைக்கப்படுமென ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கோவில் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , பூஜையில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் இதே போன்று வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலை அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இந்த பூமி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment