கருடன் படத்தை பார்த்து மிரண்டு போன யுவன்! சூரி கிட்ட சொன்ன விஷயம்?

soori garudan

கருடன் : இசையமைப்பாளர் யுவன் சங்க ராஜா கருடன் படத்தினை பார்த்துவிட்டு படம் அருமையாக இருக்கிறது என சூரிக்கு கால் செய்து பாராட்டியுள்ளார்.

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருடன்’. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில் படத்திற்கு பின்னணி இசை அமைப்பதற்கு முன்னதாக படத்தினை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பார்த்துவிட்டு மிரண்டு விட்டாராம். படத்தை ஒரு முறை முழுவதுமாக பார்த்துவிட்டு சூரிக்கு கால் செய்து படத்தை பற்றி பேசினாராம். இந்த தகவலை நடிகர் சூரி கருடன் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய சூரி ” யுவன் சங்கர் ராஜா சார் படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பிரதர் எப்படி இருக்கீங்க என்று கேட்டாரா. நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னேன். பிறகு கருடன் படம் பார்த்தேன் பிரதர் படம் ரொம்பவே அருமையாக இருக்கிறது என்னை ரொம்பவே தொந்தரவு செய்துவிட்டது. படம் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியவில்லை.

உங்களுடைய நடிப்பு ரொம்பே அருமையாக இருக்கிறது. வழக்கமாக எடுக்கும் படம் போல இருக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் வேற மாதிரி ஒரு படத்தை எடுத்து வைத்து இருக்கிறீர்கள் கண்டிப்பாக என்னால் முடிந்த அளவுக்கு பின்னணி இசையை கொடுக்கிறேன். பின்னணி இசை கொடுக்க நிறைய இடம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்” என்று யுவன் பாராட்டியதாக சூரி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்