கோட் படத்தில் முதன் முதலாக அந்த விஷயத்தை செய்த விஜய்? உண்மையை உடைத்த யுவன்!

கோட் : நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
விஜய் பொதுவாகவே தான் நடிக்கும் படங்களில் சமீபகாலமாக ஒரு பாடலை பாடி வருவது வழக்கம் தான். ஆனால், அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தில் மட்டும் முதன் முறையாக இரண்டு பாடல்களை பாடியுள்ளதாக படத்திற்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் கோட் படத்தை பற்றிய அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த யுவன் ” கோட் படம் நன்றாக வந்து இருக்கிறது. தளபதி சார் முதன் முறையாக இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
யுவன் தெரிவித்துள்ள இந்த அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் கொண்டாடட்டத்தில் குதித்துள்ளனர். ஏற்கனவே, கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் ஒரு பக்கம் நல்ல விமர்சனத்தையும், மற்றோரு பக்கம் எதிர்மறையான விமர்சனத்தையும் பெற்று வந்த நிலையில், இரண்டாவது பாடல் எல்லாரையும் கவரும் வகையில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
வரும் ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜய் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். எனவே, அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, கோட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
March 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
March 18, 2025