மஞ்சள் வீரனாக புல்லட்டில் பறக்கும் டிடிஎஃப் வாசன்.! 299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு….
யு-டியூபர் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
யூ-டியூபில் விலையுயர்ந்த பைக்குகளில் பல்வேறு ஊர்களுக்கு சென்று அந்த பயண விடியோவை தனது பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களை குறிப்பாக 2K-கிட்ஸ் எனும் பதின்ம வயது பருவத்தினரை வெகுவாக கவர்ந்தவர் டிடிஎஃப் வாசன்.
இவர் விலையுயர்ந்த பைக்குகளில் அதிவேகமாக சென்று சில சமயங்களில் போக்குவரத்து காவல் துறையினரிடம் சிக்கி சர்ச்சையாகிய சம்பவங்களும் நடத்தியதுண்டு.
இப்படி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் டிடிஎஃப் வாசன் தற்போது தமிழ் சினிமாவில் புதிய ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். டிடிஎப் வாசன் பிறந்தநாளான அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் பட போஸ்டர் வெளியாகியுள்ளது. செல்அம் என்பவர் இயக்க உள்ளார். 299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் பிலிம் கம்பெனி எனும் நிறுவனம் தயாரிக்கிறது. போஸ்டரில் கையில் ஈட்டியுடன் புல்லட் பைக்கில் பறக்கும் படி டிடிஎப் வாசன் இருக்கிறார். மற்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.