பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் என்று கூறலாம். ஒவ்வொரு சீசன்களிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மக்களுடைய பேவரைட் போட்டியாளர்களாக இருப்பார்கள். அப்படி தான் இந்த 7-வது சீசனில் பிரதீப் ஆண்டனி விளையாடும் விதம் தங்களுக்கு மிகவும் பிடித்து போக மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.
ஆனால், இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப் விளையாடிய விதம் அனைவர்க்கும் எரிச்சலை கொடுத்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ‘ பிரதீப் சற்று கோபத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். பிறகு வாக்கு வாதத்தில் பிரதீப் கூல் சுரேசை பார்த்து அவன் ஒரு சில்லறை என்று கூறுகிறார். உடனடியாக விஸ்ணு யாரை சொல்கிறாய் கூல் சுரேஷ் அண்ணனா? என்று கேட்கிறார்.
அதற்கு பிரதீப் ஆமா அவன் தான் சில்லறை பையன் என்று கூறினார். அதற்கு கூல் சுரேஷ் என்னையா சொன்ன என்று கத்தி கேட்கிறார் நீ சில்லறை பையன் தான் என பிரதீப் மீண்டும் கூறுகிறார். இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த கூல் சுரேஷ் செருப்பால அடிப்பேன் மரியாதை இல்லாமல் பேசாத என்று கூறுகிறார்.
இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் வாக்கு வாதமே ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நிக்சன் அண்ணா விடுங்க என்று பிரதீப்பை பார்த்து சொல்ல நிக்சனை நெஞ்சில் கைவைத்து தள்ளி சென்று போனார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் நீங்கள் விளையாடுவது தவறு என கூறினார்கள்.
அதைப்போல பெண் போட்டியாளர் ஒருவரும் இப்படி செய்யாதீங்க அண்ணா என்பது போல கூற பிரதீப் மிகவும் கோபத்துடன் உன்னுடைய வேலையை மட்டும் பார்த்துவிட்டு போமா என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ இன்று நடைபெறும் எபிசோடில் இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ப்ரோமோவை பார்த்த பலரும் தவறு என்று தெரிந்தும் “நான் அப்படித்தான் பேசுவேன், விளையாடுவேன்” என்று அதீத நம்பிக்கையுடன் ப்ரதீப் விளையாடும் விதம் நன்றாக இல்லை என்றும் இதுவரை ப்ரதீப்பின் விளையாட்டை நம்பியவர்களுக்கு நேற்றில் இருந்து அந்த நம்பிக்கை காணாமலே போய் விட்டது என்பதே உண்மை எனவும் கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…