உங்கள் குழந்தை சில மணிநேரம் தான் உயிரோடு இருக்கும்.! அஜித் பட நடிகைக்கு நடந்த சோகம்.!
முந்திய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த கனிகா சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் பெரிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகாக காத்துள்ளார். இவர் அஜித்திற்கு ஜோடியாக “வரலாறு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்றே கூறலாம்.
இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலே ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- 5 லட்சம் பரிசு …ஆபாச படத்தை காட்டி பணம் கேக்குறாங்க…கதறி கண்ணீர் விட்ட சீரியல் நடிகை.!
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கனிகா தனக்கு குழந்தை பிறந்த போது நடந்த சம்பவம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “நான் கர்ப்பமாக இருந்தபோது, குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அனைத்து ஆரோக்கியமான விஷியங்களையும் செய்து வந்தேன்.
மருத்துவர்களும் குழந்தை நன்றாகவே இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் எனக்கு குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது. சில மணி நேரம் தான் உயிரோடு இருப்பார் என்றார்கள். வாழ்க்கையே எனக்கு இருண்டுவிட்டது. அதன்பின் எப்படியோ போராடி குழந்தையை காப்பாற்றினோம்” என்று கூறியுள்ளார்.