இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து கடைகளும், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பலரும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வேண்டுகோளின் பேரில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஊரடங்கு உத்தரவை மதித்து, இளைஞர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இயக்குநர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வீட்டில் இருக்கும் பொழுது தான் இயக்கிய அச்சம் என்பது மடமையாடா, என்னைஅறிந்தால் ஆகிய திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனென்றால், “அச்சம் என்பது மடமையாடா” திரைப்படத்தில் சிம்பு தனது காதலியைக் கூட்டிக் கொண்டு ஒரு சாலைப் பயணம் செல்வார்.’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித் தன் மகளை ஊர் ஊராகக் கூட்டிச் செல்வார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதைச் செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
“வாரணம் ஆயிரம்” படத்தை பாருங்கள். அதில் கடினமான தருணங்களில் எப்படி நம்மை தயார்படுத்தி மீண்டு வரலாம் என அந்த படத்தில் காட்டப்பட்டு இருக்கும் என கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…