புஷ்பா 2 : “நீ ஜெயிச்சிட்ட மாறா”…மக்கள் கொடுத்த வரவேற்பு..எமோஷனலான அல்லு அர்ஜுன்!
புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
ஹைதராபாத் : ஒரு படத்திற்கு வசூல் எந்த அளவுக்கு கிடைக்கிறது என்பதை விட அந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் எந்த அளவுக்கு எமோஷனலாக பாராட்டுகிறார்களோ அதுவே படத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அப்படி தான் தற்போது புஷ்பா 2 படத்தினை பார்த்த பலரும் அல்லு அர்ஜுன் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.
படம் கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட அல்லு அர்ஜுன் நடித்த எமோஷனலான காட்சிகளை பார்த்துவிட்டு மக்களும் என்னடா இவர் இப்படி நடிக்கிறார்? என எமோஷனலாகி வருகிறார்கள். மக்கள் கொடுத்த இந்த ஆதரவை பார்த்து அல்லு அர்ஜுனும் இது தான் எனக்கு கிடைத்த வெற்றி என எமோஷனலும் ஆகி இருக்கிறார்.
புஷ்பா படம் இன்று வெளியானதை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு தன்னுடைய மனைவி மற்றும் படக்குழுவினருடன் அல்லு அர்ஜுன் சென்று இருந்தார். அங்கு அல்லு அர்ஜுன் வருகிறார் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் இன்னும் அதிகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களுடன் அமர்ந்திருந்து படம் பார்த்த அவர் மக்கள் கொடுக்கும் ஆதரவை ரசித்துக்கொண்டும் இருந்தார்.
அப்போது எமோஷனலான க்ளைமாக்ஸ் காட்சி ஒன்று வரும் போது அதில் அல்லு அர்ஜுன் நடிப்பை பார்த்து அங்கிருந்த மக்கள் அனைவரும் கைகளை தட்டி நீங்க வேற லெவல் என்பது போல பாராட்டினார்கள். இதனை பார்த்த அல்லு அர்ஜுன் நம்ம ஊரு வசனத்தில் சொல்வது போல “நீ ஜெயிச்சிட்ட மாறா” என்கிற வகையில் எமோஷனலான ரியாக்சன் ஒன்றை கொடுத்தார். எப்போதுமே ஒரு நடிகரின் படம் வெற்றி அடைந்துவிட்டது என்றாலே அந்த நடிகரின் புகைப்படதை சூரரைப்போற்று படத்தில் சூர்யா கொடுக்கும் அந்த ரியாக்சன் வைத்து வைரலாக்குவது வழக்கம்.
அப்படி ஒரு ரியாக்சனை தான் அல்லு அர்ஜுன்கொடுத்திருக்கிறார் . அவர் கொடுத்த அந்த ரியாக்சன் வைத்து பார்க்கும்போதே படத்திற்கு வசூலை விட இப்படியான நடிப்புக்கு மக்கள் கொடுத்த ஆதரவு தான் பெரிய வெற்றி என்பது தெரிந்தது. மேலும், புஷ்பா 1 திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். இரண்டாவது பாகத்திலும் அப்படி நடித்துள்ளதால் இதற்கும் வாங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.