ஜவான் படத்தில் நீங்க நடிக்கணும்…அல்லு அர்ஜுனை தேடிப்போன ஷாருக்கான்.?
ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, பிரியாமணி, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், நேற்று இணையத்தில் ஒரு புதிய தகவல் பரவியது. அது என்னவென்றால், நடிகர் அல்லு அர்ஜுன் ஜவான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும், அது பெரிதளவில் பேசப்படும் எனவும் தகவல் தகவல்கள் பரவியது.
மேலும், தற்போது இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் எதற்காக ஒத்துக்கொண்டார் என்பதற்கான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் அல்லு அர்ஜுனின் மார்க்கெட் உயர்ந்து விட்டது. எனவே ஜவான் படத்தில் நடிக்க வேறு யாரும் அவரிடம் சம்மதம் கேட்ட்டால் நன்றாக இருக்காது என்று ஷாருக்கான் நேரடியாக தேடி சென்று அவரை சந்தித்து பேசியுள்ளாராம்.
நேரில் சென்று அல்லு அர்ஜுனிடம் நீங்கள் ஜவான் படத்தில் ஒரு முக்கிமான கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற கேட்க அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜவான் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.