இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தியரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுவருகிறது . அஜித் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதால் இந்த படத்தின் மீது கூடுதலாக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின் பொது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், ஒரு புகைப்படத்தில் சமந்தா சிரிக்கும் போது, நயன்தாரா சிரிக்கவில்லை, மற்றோரு புகைப்படத்தில் நயன்தாரா சிரிக்கும் போது, சமந்தா சிரிக்கவில்லை. இந்த இரண்டு புகைபடங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…