நடிகர் விஜய்யும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் தளபதி 68 திரைப்படத்தின் மூலம் ஒன்றாக பணியாற்றவுள்ளார்கள். விஜயின் 68 -வது படமான இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது இருப்பினும் இன்னும் படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் தளபதி 68 படத்திற்கான சில தகவல்கள் அடிக்கடி வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தளபதி 68 படத்தின் முதல் பாடல் தர லோக்கலான பாடலாக இருக்கும் என தெரிவித்து இருந்தார். அது மட்டுமின்றி படத்தில் பிரசாந்த், சிம்ரன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கிடையில், வெங்கட் பிரபு தன்னை வைத்து இயக்கும் படத்தில் அவருடைய தம்பியும் நடிகருமான பிரேம் ஜி நடிக்க கூடாது என்று விஜய் கூறிவிட்டாராம். ஏனென்றால், பிரேம் ஜி அஜித்தின் ரசிகர் என்பதால் விஜய் அப்படி கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபுவும், பிரேம் ஜியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.
அந்த பேட்டியில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு ” நானும் உன்னுடைய அண்ணாவும் படம் செய்யும்பொழுது நீ அந்த படத்தில் நடிக்கவே கூடாது என விஜய் அண்ணா பிரேம்ஜியிடம் கூறிவிட்டார். நீ தல ஆளு என்று எனக்கு தெரியும் அதனால் நீ அந்த படத்தில் நடிக்கவே கூடாது என்று கூறிவிட்டார். நீ வேண்டுமென்றால் அந்த படத்திற்கு இசையமைத்துக்கொள் ஆனால் நடிக்க கூடாது” என கண்டிஷன் போட்டுவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். எனவே, தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவும் விஜய்யும் இணைந்துள்ள நிலையில், அந்த படத்தில் பிரேம் ஜி நடிப்பது சந்தேகம் தான் எனவும் கேள்வி எழும்பியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…