“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!
விடாமுயற்சி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து வெளியீட்டு வருகிறார்கள்.
![vidaamuyarchi troll memes](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vidaamuyarchi-troll-memes.webp)
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும் மீம்ஸ் செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அப்படி செய்யப்பட்டிருக்கும் மீம்ஸ்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..
ஒருவர் விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சிரிக்கிறா? என்று பாரு என களவாணி படத்தில் வரும் மீம் டெம்ப்லேட்டில் அஜித் புகைப்படத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார். ஏனென்றால், மகிழ்திருமேனிக்கு முன்னதாகவே அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கவிருந்தார் . அதன்பிறகு சில பிரச்சினைகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார்.
மற்றொரு நெட்டிசன் ” அனிருத் படம் பார்த்துவிட்டு வழக்கமாக எமோஜிகளை வழங்கி தனது விமர்சனங்களை கூறுவார். ஆனால், இந்த முறை கூறவில்லை என்பதால் படம் இப்படி விமர்சனம் பெற்று வருகிறது என்பது போல மீம்ஸ் எடிட் செய்துள்ளார்”
ஒரு பக்கம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட, மற்றோரு பக்கம் அஜித் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்த காரணத்தால் கொண்டாடி வருகிறார்கள். விடாமுயற்சி பற்றிய ட்ரோல்கள் வந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.