உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். எனவே, வசூல் ரீதியாகவும் படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.
இந்த படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். பார்த்திபனுடன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- காமெடியை கைவிட்ட சிவகார்த்திகேயன்..?! வெளியான புதிய ஷாக்கிங் தகவல்…!
படத்தை திரையரங்கில் பார்க்காத ரசிகர்கள் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘இரவின் நிழல்’ திரைப்படம் இன்று அல்லது நாளை பிரபல ஓடிடி நிறுவனமா அமேசான் பிரேமில் வெளியாகும் என படத்தின் இயக்குனர் பார்த்திபன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” காலை வணக்கம்! அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். எனவே ஒரு வழியா இரவின் நிழல் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…